Saturday, 22 September 2012

தி.மு.க.,விலிருந்து சிவாஜி விலகியதன் பின்னணி


எம்.ஜி.ஆர்., தி.மு.க.வில் சேர்ந்து வளர்ந்த வரலாறு என்ற பதிவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், திருப்பதி போய்வந்த சர்ச்சையால் தி.மு.க.,வை விட்டு விலகினார் என்று குறிப்பிட்டிருந்தேன். அது எம்.ஜி.ஆரை பற்றிய பதிவென்பதால் சிவாஜியை பற்றி மேலோட்டமாகவே குறிப்பிட்டிருந்தேன். அதை பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள் என்று ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. அந்த பின்னூட்டத்திற்கான பதில்தான் இது....

1957-ஆம் ஆண்டு, பெரும் புயலில் சிக்கியது. தி.மு.க.,சார்பில் புயல் நிவாரண நிதி திரட்டுமாறு அறிஞர் அண்ணா அவர்கள் கோரிக்கை விடுத்தார். அண்ணாவின் கோரிக்கையை ஏற்று நிதி திரட்டும் பணியில் நடிகர்கள் ஈடுபட்டனர். அதில் சிவாஜியும் ஒருவர். நிறைய நிதி வசூலானது.

அதிக நிதி வசூலித்தவர்களுக்கு பாராட்டுவிழாவும் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொள்ள சிவாஜிக்கு அழைப்பில்லை. அதே நேரம், அந்த விழாவில் கலந்து கொள்வதற்கு எம்.ஜி.ஆர்., அழைக்கப்பட்டிருந்தார். அதிக நிதி வசூலித்து தந்ததாக எம்.ஜி.ஆரை அண்ணாவும் மற்றவர்களும் பாராட்டினார்கள்.

என்னை ஒதுக்கவேண்டும் என்பதற்காகவே எம்.ஜி.ஆரை பாராட்டியிருக்கிறார்கள், என்னை வேண்டுமென்றே புறக்கணித்திருக்கிறார்கள் என்று அதிருப்தி தெரிவித்தார் சிவாஜி.
கடவுள் மறுப்பில் தீவிரமாக இருந்த சிவாஜியை, அவருக்கு தி.மு.க.மீதிருந்த அதிருப்தியை பயன்படுத்தி அந்த நேரத்தில் அவரை திருப்பதி அழைத்து சென்று சிறப்பு தரிசனம் செய்யவைத்தார் இயக்குனர் பீம்சிங்.

 நாத்திகரான சிவாஜி திருப்பதிக்கு சென்றதை அறிந்த பத்திரிகையினர்  நாத்திகரான சிவாஜி ஆத்திகராக மாறினார் என்று செய்தி வெளியிட்டனர். திருப்பதியிலிருந்து சென்னை திரும்பும் வழிகளில் சுவரெங்கும் திருப்பதி கணேசா கோவிந்தா..கோவிந்தா என்று எழுதியிருந்தனர். இதை கவனித்த சிவாஜி மனம் வேதனை அடைந்தார். மேலும், சிவாஜியின் போஸ்டர்களில் சாணி அடித்த செய்தியும் அவரின் கவனத்திற்கு வந்தது. கடுப்பாகிவிட்டார்.


இனிமேலும், பொறுமையாக இருப்பதில் அர்த்தமில்லை என்று முடிவுசெய்து உடனே காமராஜரை சந்தித்து தன்னை காங்கிரசில் இணைத்துக்கொண்டார். தி.மு.க.வினர்தான் என்னை தூக்கிக்கொண்டு போய் காங்கிரசில் போட்டனர் என்று பேட்டியும் அளித்தார்.

=============================================

இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எங்களுக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறோம். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.  உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com


9 comments:

 1. அருமையான பதிவு.
  திரு சிவாஜி அவர்களை மாதிரி வெள்ளை மனம் உள்ளவர்களுக்கு அரசியல் லாயக்கில்லை. அவர் அரசியலுக்கு வந்தது தான் அவர் செய்த பெரிய பிழை.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. சிவாஜியின் அரசியல் வாழ்க்கையை விரிவா சொல்லலாமே..

  கட்சியில் சேர்ந்தது முதல் விலகியது வரை!

  -சின்னபுள்ளதனமா கேக்குறேனோ... இனிமேதான் அரசியல் அறிவ வளத்துக்கலாம்னு இருக்கேன்... அதுனால ஹெல்ப் மீ ப்ளீஸ்... நான் முதலமைச்சர் ஆனா உங்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்துடுறேன் :-)))))))

  ReplyDelete
 3. எலேய்...எப்படிலே முடியுது?? தினமும் இங்க ஒரு போஸ்ட், உன் தளத்தில் ஒரு போஸ்ட்... ம்ம்.. கலக்குறே கஸாலி....

  ReplyDelete
 4. ஏகப்பட்ட தகவல் பிழைகள்.

  1.சிவாஜி ஒரு போதும் தி.மு.க உறுப்பினராக இருந்ததில்லை . பெரியார் மற்றும் அண்ணா மீது கொண்ட தனிப்பட்ட அன்பால் அவர் தி.மு.க அனுதாபியாக இருந்தாரே தவிர உறுப்பினராக இருக்கவில்லை .எனவே தி.மு.க-விலிருந்து விலகினார் என்பதே பிழை ..காமராஜரோடு சேர்ந்த போது காங்கிரசில் உறுப்பினரானார் என்பது உண்மை.

  2. எம்.ஜி.ஆர்-க்கு முன்பே திமுக-வுக்காக அதிகம் உழைத்தவர் சிவாஜி

  3. சிவாஜி ஒரு போதும் நாத்திகராக இருக்கவில்லை .பெரியார் , அண்ணா மேல் அபிமானம் கொண்டிருந்தார் என்பதால் அவர் நாத்திகராக இருந்தார் என்பது தகவல் பிழை.

  ReplyDelete
 5. Please tell us

  1. What is the "problem" between barathiraja and ilayaraja? why they were separated in movies?

  ReplyDelete
  Replies
  1. வைரமுத்துவுக்கும் இளையராஜாவுக்கும் கூட பிரச்சினைன்னு கேள்விப்பட்டேன்...

   Delete
  2. வேற என்ன துட்டுக் கொழுப்பு....கூடவே நான் பெருசா..நீ பெருசான்ற சராசரி வெட்டி ஈகோ பிரச்சினை :-)))

   Delete
 6. sakkadaikulla kulika nanum varan(aarasiyal oru sakkada la aatha sonnan.)

  ReplyDelete
 7. ரஹீம்,

  காமராஜர் படத்தை சமீபத்தில் பார்த்தேன், அதில் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் திட்டம் கொண்டு வந்த காமராஜர் , தொடர்ந்து வந்த எல்லா தேர்தலிலும் நின்றது முரணாக இர்ருகே... எதாவது விளக்கம் உண்டா இதற்கு..

  ReplyDelete

இது உங்கள் இடம்.