Friday 7 September 2012

பட்டிக்காட்டான் ஜெய்-க்கு செங்கோவியின் பதில்..........


ஜனாதிபதி தேர்தல் நடைமுறை இதுதான்.....


என்ற பதிவில் பட்டிக்காட்டான் ஜெய் ஒரு கேள்வியை கேட்டிருந்தார். அந்த கேள்விக்கான பதிலை செங்கோவி அளித்துள்ளார். 

பட்டிகாட்டான் Jey said...

கஸாலி/செங்கோவி : ஓவ்வொரு எம்பியோட வாக்கின் மதிப்பு 708 ஓகே. அனால் சட்டசபை உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு அவர்களின் மாநிலம் சார்ந்து வேறுபடுகிறது .

உ.ம். 1. ஆந்திர 294 MLA x 148(வாக்கு மதிப்பு = 43,512(மொத்த மாநில ச.ம.உ க்களின் வாக்கு மதிப்பு)

2. சிக்கிம் 32 x 7 = 224
3. தமிழ்நாடு 234 x 176 = 41184
4, உ.பி 403 x 208 = 83824

மாநிலத்துக்கு மாநிலம் எதன் அடிப்படையில் ச.ம.உ.க்களின் வாக்கு மதிப்பு மாறுபடுகிறது? 

என்பது தெரிந்தால் விளக்கவும்.

நன்றி...............////////////////



செங்கோவி said...

//பட்டிகாட்டான் Jey said... 

கஸாலி/செங்கோவி : ஓவ்வொரு எம்பியோட வாக்கின் மதிப்பு 708 ஓகே. அனால் சட்டசபை உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு அவர்களின் மாநிலம் சார்ந்து வேறுபடுகிறது .

உ.ம். 1. ஆந்திர 294 MLA x 148(வாக்கு மதிப்பு = 43,512(மொத்த மாநில ச.ம.உ க்களின் வாக்கு மதிப்பு)

2. சிக்கிம் 32 x 7 = 224
3. தமிழ்நாடு 234 x 176 = 41184
4, உ.பி 403 x 208 = 83824

மாநிலத்துக்கு மாநிலம் எதன் அடிப்படையில் ச.ம.உ.க்களின் வாக்கு மதிப்பு மாறுபடுகிறது? //

அது மாநில மக்கள்தொகையைப் பொறுத்த விஷயம் நண்பரே..உதாரணமாக:

ஒரு மாநில மக்கள் தொகை = 50000000
எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை = 200
வகுத்தல் மாறிலி (Dividing Constant) = 1000

மதிப்பு = 50000000/(200*1000) = 250.

மாநில எம்.எல்.ஏ.மதிப்பு = 200 * 250 = 50000



இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எனக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறேன். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.  உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com


6 comments:

  1. இலங்கையில் இருந்து ஆன்மீக வழிப்பாடுகளுக்காக வேளாங்கண்ணி மாதா ஆலயத்திற்கு சென்ற இலங்கையர்கள் மீது (சிங்களவர், தமிழர் இரு சாரரும் இருந்துள்ளனர்) தாக்குதல் நடத்தியும், இலங்கை பாடசாலை மட்ட உதைபந்தாட வீரர்கள்(சிறுவர்கள்) நட்பு ரீதியான விளையாட்டு போட்டிக்கு சென்னை சென்றதை எதிர்த்து, அவர்களை திருப்பி அனுப்பியும், விளையாட்டு மைதான அதிகாரியை சேவை இடைநீக்கம் செய்தும்(அது உங்க பிரச்சினை), மற்றும் தமிழ்நாட்டில் காணும் இடமெல்லாம் இலங்கை அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தியும் சந்தோஷ பட்டுகொள்ளும் தமிழ்நாட்டு நண்பர்களே! உங்கள் செயல்களால் அவமானம் அடைந்து வெட்கி தலைகுனிந்து பாதிப்புறும் ஒரு சாமான்ய இலங்கை தமிழன் நான்..

    நீங்கள் செய்தது தப்பென்று நாம் கூறவில்லை. உணர்ச்சிகள் மேலோங்கும் போது இவ்வாறு செய்யத்தான் தோணும். உங்களின் உணர்வுகள் புரிகின்றன. இதைவிட அதிகமான உணர்ச்சியில் 30 வருடங்களுக்கு மேலாக இருந்தவர்கள் நாங்கள். ஆனால் நீங்கள் இலங்கையர்களை தாக்கும் அந்த கணங்களில் இலங்கையில் வாழும் எம்போன்ற அப்பாவிகளை கொஞ்சமாவது நினைத்து பார்கின்றீர்களா? உங்கள் செய்கைகளினால் பாதிக்கப்பட போவது சென்னையில், மதுரையில், திருச்சியில், கனடாவில், நோர்வேயில் வசிக்கும் தமிழன் அல்ல.துவேஷ வன்மங்களுக்கு ஆளாகபோவது மீண்டும் இலங்கையில் வாழும் அப்பாவி தமிழனே. லட்சங்களில் சொந்தங்களை இழந்து வாடும் இலங்கை தமிழனே. எங்கள் வலிகளை புரிந்துகொள்ளுமாறு கெஞ்சுகிறோம்.

    30-40 வருஷமா வராத பாசம் எங்க இருந்துய்யா வந்துச்சு உங்களுக்கு? நாங்க எல்லாம் கொத்து கொத்தா செத்து போனப்போ, தமிழ்நாட்டுல இருந்து எவன்யா வந்தான். தமிழ்நாடு அரசு இந்திய மத்திய அரசோடும் இந்திய மத்திய அரசு இலங்கை அரசோடும் யுத்தகாலத்தில் கொஞ்சிக்குலாவி உறவாடி கொண்டுதானே இருந்தன. இப்ப மட்டும் தமிழ் நாட்டில் இலங்கை யாத்திரிகர்கள்,சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்துவதால், நீங்கள் சாதிக்க நினைப்பது ௭ன்ன? அதேபோல் இலங்கை அப்பாவி தமிழ்மக்களுக்கு இதனால் ஏற்படும் நன்மை ௭ன்ன?

    இந்திய தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் தங்களது சுயநல அரசியல் இலாபத்துக்காக இலங்கையில் வாழும் அப்பாவி தமிழ் மக்களை பலிக்காடாவாக்கவா வேண்டும்?.

    ReplyDelete
  2. கசாலி, செங்கோவி நண்பர்களே இது தொடர்பான உங்கள் பார்வைகளை ஒரு காத்திரமான பதிவாக காண விரும்புகிறேன்

    ReplyDelete
  3. // இலங்கை தமிழன் பிரதீப் said...//

    நீங்க சொல்வதில் லாஜிக் இருக்கு சரிதான். ஆனா ஓவர பொங்கிருக்கீங்க சகோதரா.
    இந்த செயல் மட்டுமல்ல இலங்கை அரசிற்கெதிரான எந்த எதிர்ப்பும் அங்குள்ள சகோதரர்களுக்கு எதிரானதாக முடியும் என்பதை எல்லோரும் அறிவார்கள். இங்குள்ள அரசியல் வாதிகளின் சுயநலத்திற்கு சற்றும் குறவானதல்ல உங்களைப் போன்றோரின் சுயனலமும்.

    நீங்கள் சுட்டிக்காட்டிய விசயத்தில் இங்குள்ள தமிழ்நாட்டுத் தமிழர்கள் பலரே அரசை விமர்சித்துள்ளார்கள். ஆனால் நீங்கள் சொல்லும் தொனியானது இனிமேல் தமிழ்நாட்டு தமிழர்கள் எங்களுக்கு உதவி என்று ஏதும் செய்யாமல் பொத்திக்கொண்டு இருந்தால் போதும் என்று சொல்வதுபோல் உள்ளது.

    ஒருபக்கம்இங்கிருக்கிரவர்களை பொத்திக்கொண்டு இருக்கச் சொல்கிறீர்கள், மறுபக்கம் அதுபற்றி கண்டனம் செய்து பதிவெழுத சொல்கிறீர்கள். என்னைப்போன்ற சராசரி தமிழர்களின் ஆதரவு ஈழத்தமிழர்களுக்குத்தான், உங்களைப்போன்ற சுயநம்பிடித்த இலங்கத்தமிழர்களுக்கு இல்லை.

    ReplyDelete
  4. புரொபைல் இல்லாவிடினும் பரவாயில்லை.. நான் பதில் கூறுகின்றேன்..
    //நீங்கள் சொல்லும் தொனியானது இனிமேல் தமிழ்நாட்டு தமிழர்கள் எங்களுக்கு உதவி என்று ஏதும் செய்யாமல் பொத்திக்கொண்டு///

    உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டுகிறேன்..


    //மறுபக்கம் அதுபற்றி கண்டனம் செய்து பதிவெழுத சொல்கிறீர்கள். ///
    பதிவெழுதுவதும், அப்பாவி யாத்திரிகர்கள், சிறுவர்களை தாக்குவதும் ஒன்றா சகோதரா?

    //என்னைப்போன்ற சராசரி தமிழர்களின் ஆதரவு ஈழத்தமிழர்களுக்குத்தான், உங்களைப்போன்ற சுயநம்பிடித்த இலங்கத்தமிழர்களுக்கு இல்லை.///

    கண்டிப்பாக.. மெச்சத்தக்க விடயமே.. ஆனால் எனது சுயநலம் என்னவெனில் நீங்கள் ஆதரவு கொடுப்பதற்கு இங்கு தமிழர் என்று ஒரு இனம் இருக்க வேண்டுமே? ஏன் அவர்களின் அழிவுக்கு நீங்களே (எங்களுக்கு உதவ முற்படும் நீங்களே) காரணமாக இருக்கின்றீர்கள்..

    ReplyDelete
  5. இது எவ்வளவு இருந்தால் என்ன? இந்திய ஜனநாய்கத்தில் ஒரு தலைவன்/தலைவி வசதிக்கேற்ப மீதி பேர் எப்படி வாக்குப் போட்டா என்ன?வாழ்க உலகத்தின் "பெரிய" ஜனநாய்கம்!

    ReplyDelete

இது உங்கள் இடம்.

More than a Blog Aggregator