Monday, 17 September 2012

எம்.ஜி.ஆருக்கும் சந்திரபாபுக்கும் அப்படி என்னதான் பிரச்சினை?

நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள விரிசல் என்ன?சந்திரபாபு ஏன் தற்கொலை செய்துகொண்டார்? இதைப்பற்றியும் ஒரு தனிபதிவாக அறிய தரவும் சகோ.
என்ற கேள்வியை கேட்டிருந்தார். அவரின் கேள்விக்கு பதிலாய் முகில் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட கண்ணீரும் புன்னகையும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் விஷயங்களை அப்படியே தருகிறோம். 

குலேபகாவலி ஷூட்டிங்கில் சந்திரபாபு, பட குழுவினருடன் சேர்ந்து ஜோக் அடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார். அவர் அடித்த ஜோக்கிற்கு எல்லோரும் சிரித்துக்கொண்டிருந்தனர். எம்.ஜி.ஆரை தவிர.

“என்ன மிஸ்டர் எம்.ஜி.ஆர், சிரிச்சா முத்தா உதிர்ந்திரும்?” (எல்லோரையும் மிஸ்டர் என்றுத்தான் அழைப்பார்)

“உங்க ஜோக்குக்கு கிச்சு கிச்சு மூட்டினாத்தான் சிரிப்பு வரும்”

இதற்கு அவமானமாக உணர்ந்த சந்திரபாபு, மற்றவர்களுடன் விசாரித்ததில் தெரிந்துக்கொண்டது. அவர் எப்போதும், எதிலும் தான் மட்டுமே பிரபலமாகத் தெரிய வேண்டும் என்று நினைப்பார். கூட்டத்தோடு சேர மாட்டார். தனிமையில்தான் அமர்ந்திருப்பார். அவருடன் பேச வேண்டுமானால் அவர் இருக்கும் இடம் தேடித்தான் போக வேண்டும்.

அதை பற்றி சந்திரபாபு சொன்னது,

“அன்று அவர் வளர்த்துக்கொண்ட அந்த ‘தான்’ என்ற அகந்தை, இன்று அவர் வளர்ந்ததைப் போலவே வளர்ந்திருப்பதை நான் கண்கூடாகக் காண்கிறேன். அந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு நான் அவரை விட்டு ஒதுங்கியே இருப்பேன்.”

---

குலேபகாவலி, புதுமைப்பித்தன் வெற்றிகளுக்கு பிறகு, எம்.ஜி.ஆர் படங்களில் காமெடிக்கு சந்திரபாபுதான் வேண்டும் என்றார்கள் விநியோகஸ்தர்கள். ‘சந்திரபாபுவின் காமெடிக்காகவே படத்தை பார்க்கலாம்’ போன்ற பேச்சுக்கள் எம்.ஜி.ஆரின் காதுக்களுக்கு சென்றது.

அதில் இருந்து, “சந்திரபாபு வேண்டாம். அவன் இருந்தால், நான் கால்ஷீட் தரமாட்டேன்” என்று எம்.ஜி.ஆர். கூறியதாக வந்த செய்திகள் சந்திரபாபுவுக்கு தெரிய வந்தது.

ஆனால், அதற்கு பிறகும் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். சந்திரபாபுவை புகழ்ந்து பேசியிருக்கிறார்.

---

அடிமைப்பெண் ஷூட்டிங்.

சந்திரபாபுவும், ஜெயலலிதாவும் ஒரு சுவர் ஏறி குதிப்பதுப்போல் காட்சி. முதலில் ஏறிய சந்திரபாபு, நிலைத்தடுமாறி கீழே விழப்போக, ஜெயலலிதா பிடித்துக்கொண்டார்.

சாப்பாட்டு நேரத்தில் அனைவருக்கும் உணவு வந்துவிட, சந்திரபாபுவுக்கு மட்டும் வரவில்லை. எம்.ஜி.ஆர். தன்னுடைய சாப்பாட்டை, சந்திரபாபுவுக்கு கொடுத்துவிட்டு, சாப்பிடாமல் இருந்துவிட்டார். கேட்டதற்கு, பசிக்கவில்லை என்று சொல்லிவிட்டார்.

ஏன் இப்படி உம்மென்று இருக்கிறார் என்று ஜெயலலிதாவிடம் சந்திரபாபு கேட்டதற்கு, ஜெயலலிதா சந்திரபாபுவை விழாமல் தாங்கி பிடித்தது அவருக்கு பிடிக்கவில்லை என்று சொன்னாராம்.

இதை கேட்டவுடன் சந்திரபாபுவுக்கு சங்கடமாகிவிட்டதாம். ஏனெனில் சந்திரபாபுவிற்கும், ஜெயலலிதாவின் குடும்பத்திற்கும் ஏற்கனவே நல்ல பழக்கம் உண்டு. ஜெயலலிதா சிறுமியாக இருக்கும்போதே, அவர்கள் வீட்டுக்கு சந்திரபாபு செல்வாராம். ஜெயலலிதாவும் ‘அங்கிள்’ என்று ஓடி வந்து பழகுவாராம்.

---

சந்திரபாபு எம்.ஜி.ஆரை வைத்து ‘மாடி வீட்டு ஏழை’ என்றொரு படத்தை ஆரம்பித்தார். இந்த படத்தில் நடிக்க சம்மதித்த எம்.ஜி.ஆர், சம்பளத்தின் ஒரு பகுதியை கருப்பாகவும், மீதியை வெள்ளையாகவும் கேட்டதாக சந்திரபாபு, பின்னர் பிலிமாலயா பத்திரிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அட்வான்ஸ் வாங்கிய எம்.ஜி.ஆர்., பூஜைக்கும் அடுத்த நாள் ஷூட்டிங்கிற்கும் மட்டுமே வந்திருக்கிறார். பிறகு, எம்.ஜி.ஆரின் கால்ஷீட் கிடைக்கவே இல்லை.

நேரே சென்று பேசி பார்க்கலாம் என சென்ற சந்திரபாபுவை, அரை மணி நேரம் கண்ணேதிரே காக்க வைத்திருக்கிறார் எம்.ஜி.ஆர். ’நான் நடிகன், நான் கதாசிரியன், நான் வசனகர்த்தா, நான் டைரக்டர் என பெருமைப்பட்ட என்னை, டேய் நீ புரொடக்‌ஷன் பாயும் கூடத்தான்’ என அப்போது உணர வைத்ததாக கூறியிருக்கிறார் சந்திரபாபு.

கடைசியில் அவரை பார்த்தபோது, கால்ஷீட் பற்றி கேட்டிருக்கிறார். கால்ஷீட் சம்பந்தமாக அண்ணனிடம் பேசிக்கொள்ளும்மாறு எம்.ஜி.ஆர் சொல்ல, அண்ணன் சக்ரபாணியை பார்க்க சென்றார் சந்திரபாபு.

அங்கே அவர்களுக்குள் நடந்த உரையாடல், ஒருகட்டத்தில் முற்றிப்போய், சேரைத்தூக்கி அடிக்கும் நிலைக்கு போய்விட்டார் சந்திரபாபு. இந்த விஷயம் வெளியே பரவி, படம் நின்று போய், அடமானம் வைத்திருந்த சந்திரபாபுவின் சொத்துக்கள் ஏலத்திற்கு வந்தது. பெயரும் கெட்டுப்போனது. குடி இன்னும் அதிகமாக, குடி கெட்டது.

---

ஒரு பேட்டியில் சந்திரபாபுவிடம் இப்படி கேட்டார்கள்.

எம்.ஜி.ஆர். பத்தி உங்க அபிப்ராயம் என்ன?

அவர் கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப்பட்டேன். பேசாம கம்பவுண்டராப் போகலாம்.

இதைப்போன்ற அவரின் வெளிப்படையான பேச்சுதான் அவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே பகையை வளர்த்தது.

அடுத்ததாக........ நீங்கள் கேட்டிருப்பதுபோல்
சந்திரபாபு தற்கொலையெல்லாம் செய்துகொள்ளவில்லை. எம்.ஜி.ஆரை வைத்து மாடி வீட்டு ஏழை என்ற படத்தை தயாரிக்க தொடங்கினார் சந்திரபாபு. ஆனால், படம் பாதியுடன் நின்றுவிட்டது. இதன் காரணமாக குடிப்பழக்கம் அதிகரித்தது அவருக்கு. அதிகரிக்க அதிகரிக்க உடல்நிலை மோசமடைந்து ஒரு நாள் ரத்தவாந்தி எடுத்தார். அத்துடன் அவர் கதை முடிந்துவிட்டது. 

==========================================================


இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எங்களுக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறோம். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.  உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com7 comments:

 1. புத்தகம் எழுதிய என் கிழக்குப் பதிப்பக நண்பரின் பெயர் முகில் தம்பி. முகிழ் அல்ல. திருத்தி விடுக. சந்திரபாபு நிறையப் பேரின் பகையைச் சம்பாதித்துக் கொண்டதற்குக் காரணமே வெளிப்படையாகப் பேசிய அவரின் வாய்தான். கடைசிக் காலங்களில் மாடி வீட்டு ஏழையாகவேதான் வாழ்ந்தார் அவர். எனக்கு அவரின் நடிப்பு ரொம்பப் பிடிக்கும். இந்தக் கட்டுரைக்கு நன்றி.

  ReplyDelete
 2. எம்.ஜி.ஆர் வாழ்ந்தவர்களும் உண்டு.கெட்டவர்களும் உண்டு.சந்திரபாபு,அசோகன் போன்றவர்கள் இரண்டாம் வகை.

  ReplyDelete
 3. அவர் தற்கொலை செய்துவிட்டதாகவே அடிக்கடி கேட்டதுண்டு...

  பல விஷயங்கள் புதிது...

  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 4. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 5. தமிழ் மணத்துக்கு பதிவிடும் மானம் கெட்ட முஸ்லிம் பதிபவர்கள்!

  மானம் ஈனம், கெட்ட தமிழ்மணம் முஸ்லிம் பதிபவர்களே. மாட்டு கரி தின்பதால் உங்களுக்கு அறிவு மழுங்கி விட்டதா. அதுதானே உங்களை ராமகோபால ஐயர் சைவம் சாப்பிட சொல்கிறார். உங்களின் உயிரினும் மேலாக மதிக்கப்பட வேண்டிய இறை தூதரை அவமானப்படுத்தி இந்த மாத்தியோசி ஐடியா மணி எழுதி இருக்கிறார்.

  உங்களு மானம் இல்லை, சூடு இல்லை, சுரணை இல்லை. உங்கள் தாயாரை திட்டி இருந்தால் பொறுப்பீர்களா. கேவலப்பட்ட தமிழ் முஸ்லிம் பதிவர்களே இன்னுமா தமிழ் மணத்திற்கு பதிவு போடுகிறீர்கள் உடனே அதை நிறுத்துங்கள். அந்த திரட்டியில் இருந்து உங்களுக்கு வாசகர்கள் வாராவிட்டால் என்ன? குடியா மொளுகி போயிடும். கேவலப்பட்டவர்களே. உங்கள் நபியை விட உங்களுக்கு தமிழ்மணம் பெரிதா? கேவலப்பட்ட முஸ்லிம் பதிபவர்கள் உணர்வார்களா?

  PLEASE GO TO VISIT : http://tamilnaththam.blogspot.com

  SEND YOUR ARTICLE: tamilnaaththam@gamil.com

  ReplyDelete

இது உங்கள் இடம்.