Tuesday, 18 September 2012

தங்கவேல் திருட்டும், கலைஞரும்.........





திருச்செந்தூர் முருகன் கோவில் தங்க வேல் காணாமல் போனது உண்மையா? அதைத் திருடியது யார்? அந்த வழக்கு என்ன ஆனது?


“திருச்செந்தூர் கோயில் விடுதியில் கோவில் உதவி ஆணையர்  சுப்பிரமணியப்பிள்ளை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்”, என்ற செய்தி, கொலை என்றெல்லாம் தமிழிதழ்களில் வெளிவந்தன. ஆளும் அதிமுக மற்றும் எதிர் கட்சி திமுக ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டனர். உண்டியல் பணத்தை சுப்பிரமணியப்பிள்ளையே திருடி மாட்டிக் கொண்டதாகவும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஆர்.எம்.வீ முதல் அ.தி.முகவினர் எல்லாரும் பிரசாரம் செய்தார்கள்.

 கருணாநிதியும் தி.முகவும் இதை மறுத்தார்கள். உண்டியலில் இருந்த வைர வேலைத் திருடிக் கொண்டது ஆர்.எம்.வீரப்பன்தான் என்றும் அதைத் தட்டிக் கேட்ட நேர்மையான அதிகாரி சுப்பிரமணியப்பிள்ளை கொலை செய்யப்பட்டதாகவும் தி.மு.க குற்றம் சாட்டியது. பதிலுக்கு அதிமுக, திமுகவைக் குற்றஞ்சாட்டியது.

திருச்செந்தூர் கோயில் உதவி ஆணையர் சுப்பிரமணியப் பிள்ளை கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க ஒரு கமிஷன் அமைக்கப்பட்டு, அதற்கு சி. ஜே. ஆர். பால், என்ற ஓய்வு பெற்ற நிதிபதி உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.
விசாரனை முடித்து முதல்வர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கையை கொடுத்த பால், அடுத்த நாளே அமெரிக்கா போய் செட்டில் ஆகிவிட்டார்.
நீதிபதி சி.ஜெ.ஆர். பால் கொடுத்த அறிக்கை சாதகமாக இல்லை என்பதால் அரசு அதனை வெளியிடாது இருந்த நேரத்தில், அறிக்கையின் நகல் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் கலைஞர் கிடைத்ததால் நகல்களை ஏடுகள் மூலமாக கலைஞர் வெளியிட்டார்.

சட்டப் பேரவையில் அந்த அறிக்கை மீது விவாதம் நடந்தபோது, ‘அறிக்கை எவ்வாறு வெளியானது, அதற்கு யாரை பழி வாங்குவது என்றெல்லாம் அரசு நேரத்தை செலவிடாமல், அறிக்கையில் கூறியிருப்பது என்ன என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார் கலைஞர்..

அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் 1982- பிப்ரவரி 12-இல் மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு சுமார் 200 கிலோமீட்டர் ஒருவாரம்  நடைபயணம் சென்றார் கலைஞர். நடக்க நடக்க காலில் கொப்புளம் ஏற்பட்டதியும் மீறி காலில் கட்டுப்போட்டுக்கொண்டு நடந்தார். வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் எரிச்சலடைந்த எம்.ஜி.ஆர். சட்டசபையை கூட்டினர். அதைப்பற்றி அவையிலே ஆளுங்கட்சி உறுப்பினர், “கருணாநிதி திருச்செந்தூர் போனார், முருகனே அவரைப் பார்க்கப்பிடிக்காமல் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு வந்து விட்டார்!” என்றார் கிண்டலாக. உடனே கலைஞர் எழுந்து, “திருச்செந்தூரில் முருகனின் வேல்தான் களவாடப்பட்டது என்று நினைத்தேன். சிலையும் காணாமல் போய்விட்ட விஷயம் இப்போது தான் தெரிகிறது!” என்றார். அந்த நேரத்தில் எம்.ஜி.ஆரால் கூட சிரிப்பை அடக்க முடியவில்லை.

அதன் பிறகு அந்த கமிஷன் என்னச்சு என்றே தெரியவில்லை.



இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எங்களுக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறோம். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.  உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com


இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எங்களுக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறோம். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.  உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com


5 comments:

  1. அறிந்து கொண்டேன் .. எம்புட்டு நடந்திருக்குது .. இனிதான் கொஞ்சம் உன்னிப்பாக இப்ப உள்ள அரசியலையாவது கவனிக்கிறேன்

    ReplyDelete
  2. கலைஞரின் அந்த நடைப் பயணம் பற்றி எனக்குத தெரியும். ஆனால் அதை வைத்து அவர் பேசிய ஜோக் புதியது எனக்கு. அருமையான கட்டுரை.

    ReplyDelete
  3. அதே வீரப்பன் இப்போது கருணாநிதியுடன் இருப்பது 'காலத்தின் கட்டாயம்'! என்ன சொல்வது! யாருக்கும் வெட்கம் இல்லை!

    ReplyDelete
  4. 2000-களில் இராம.வீரப்பனுக்கு கருணாநிதி இதயத்தில் இடமளித்தபோது தங்கவேலைப் பற்றி தனிமையில் விசாரித்திருப்பாரோ?

    ReplyDelete
  5. அந்த ஆர்.எம். வீரப்பன் கருணாநிதியின் கள்ளக் காதலி. இதைச் சொன்னது கருணாநிதியே. வீரப்பனின் 80 வது பிறந்த தினத்தில் கூறியது. தேடிப்பாருங்கள் கிடைக்கும். அப்படியே அந்த தங்கவேல் கூட ராசாத்தி வீட்டில் இருந்தாலும் இருக்கும்.

    ReplyDelete

இது உங்கள் இடம்.

More than a Blog Aggregator