Monday 24 September 2012

ஜெயலலிதாவிற்கு உதவிய (சசிகலா) நடராஜன்



அது 1989-ஆம் ஆண்டு, அண்ணா.தி.மு.க., ஜானகி அணி- ஜெயலலிதா அணி என்று இரு பிரிவுகளாக பிளவுபட்டு தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில்தான் ஜெயலலிதா முதன்முதலாக (போடி தொகுதியில்) போட்டியிட்டு வென்றார்.

அதன்பின் சில நெருக்கடிகளால் அரசியலிலிருந்தும், எம்.எல்.ஏ.,பதவியிலிருந்தும் விலக முடிவு செய்த ஜெயா அதை ஒரு ஒரு கடிதமாக எழுதினார்.  அந்தக்கடிதத்தை சபாநாயகருக்கும் அனுப்ப முடிவு செய்தார். ஜெயலலிதாவின் இந்த முடிவை அறிந்த சசிகலாவின் கணவர் நடராஜன் அவசரப்படவேண்டாம் என்று ஜெயலலிதாவை சமாதானப்படுத்தி அந்தக்கடிதத்தை தன் வீட்டில் பத்திரப்படுத்தினார்.

அதன்பின் சில நாட்களில் நடராஜன் வீட்டில் நடந்த சோதனையில் அந்தக்கடிதம் போலீசார் கைகளில் சிக்கியது. அடுத்த நாள் வெளிவந்த நாளிதழ்களில் ஜெயலலிதா ராஜினாமா பற்றிய செய்தி வெளிவந்தது. இதையறிந்த ஜெயலலிதா வழ்க்கம்போல் இது கருணாநிதியின் சதி என்று கண்டனம் தெரிவித்தார்.

அதற்கு அடுத்த நாள் கூடிய சட்டமன்றத்திலும் இது எதிரொலித்தது. தொடர்ச்சியாக கலைஞர் பட்ஜெட் உரையை படித்தபோது, அண்ணா.தி.மு.க., உறுப்பினர்களால் அந்தபட்ஜெட் உரை பறிக்கப்பட்டு கிழிக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்றது.

அன்று மட்டும் ஜெயாவின் ராஜினாமாவை நடராஜன் தடுக்காமல் விட்டுருந்தால், இப்போது ஜெயலலிதா அரசியலிலிருந்தே ஒதுங்கியிருப்பார். ஒருவேளை தன் சக நடிகைகளான வெண்ணிற ஆடை நிர்மலா, லதாவைப்போல் ஏதேனும் சினிமா அல்லது சீரியல்களில் அம்மா, அத்தை, வில்லி வேடங்களில் நடித்துக்கொண்டிருப்பார்.
அந்த வகையில், இன்று அரசியல்வானில் ஜெ., ஜொலிப்பதற்கு நடராஜனும் ஒரு காரணம். 



இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எங்களுக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறோம். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.  உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com


1 comment:

  1. நடராசன் அந்த கடிதத்தை மறைத்து அவருக்கு மட்டுமல்ல மக்களுக்கும் கெடுதல் செய்துவிட்டார் ...பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

இது உங்கள் இடம்.

More than a Blog Aggregator