Sunday 18 September 2011

கலைஞர் தண்டவாளத்தில் தலைவைத்து போராடியது எதற்காக? அது நாடகமா? (அரசியல் கேள்வி-பதில்கள் பாகம்-4)

கேள்வி கேட்டவர்: நாஞ்சில் மனோ

1) கனிமொழி இனி ஜீரோ தானே?

அது கனிமொழியின் சகோதரர்கள் கையில் உள்ளது. 

 
================

2) காங்கிரஸ் செய்யும் அடாவடித்தனத்தால் அடுத்து காங்கிரஸ் தோற்கடிக்கப்படலாம். உன்மையா?

இப்போதே காங்கிரஸ் செத்துப்போய்(தோற்கடிக்க பட்டு) விட்டது. இனி, போஸ்ட்மார்டம் செய்து புதைக்க வேண்டியதுதான் பாக்கி.
 
================

3) அடுத்த முதல்வர் விஜயகாந்தாக இருக்கக்கூடும்னு பரவலாக ஒரு பேச்சு அடிபடுகிறதே?

ஏன் ஆறரை கோடி மக்களை ஆள்வதற்கு கோடம்பாக்கத்திலிருந்தே ஆட்களை கொண்டு வருகிறீர்கள்?.சரி, கேட்டுவிட்டீர்கள். அதற்கான வாய்ப்பு இப்போது இருப்பதாக தெரியவில்லை. ஒரு வேளை அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறினால் முதலமைச்சர் வேட்பாளராக இருக்கலாமே தவிர, முதலமைச்சராக இன்னும் சில காலங்கள் அவர் காத்திருக்க வேண்டும்.
 
================

4) கலைஞருக்கு பின் தி.மு.க. உடையும் அபாயம் பற்றி?

நான்காக உடையும் சாத்தியம் குறைவு.இரண்டாக வேண்டுமானால் உடையலாம். கணிசமான தொண்டர்களும், தலைவர்களும் ஸ்டாலின் பின்னால் போகலாம். ஒரு சிலர் அழகிரி பின்னாலும் அணி வகுக்கலாம். ஆனால், கேடி சகோதரர்கள் யார் பின்னால் நிற்பார்கள் என்பதை அப்போதைய சூழ்நிலையை பொறுத்தே அமையும்.
 
=================

5) தமிழருவி மணியனின் நிலைப்பாடு சரிதானே?
நிலைப்பாடு என்றால் எதை சொல்கிறீர்கள்? ஜெயலலிதாவை ஆதரிப்பதிலா?
விடுதலை புலிகள் விஷயத்திலும்,3 பேருக்கு தூக்கு தண்டனை விஷயத்திலும் ஜெயலலிதா இப்போது எடுத்திருக்கும் நிலைப்பாட்டை ஆதரிக்கும் மணியனின் நிலைப்பாடு சரிதான். அதற்காக, ஓவராக ஜெயா ஆதரவு நிலை எடுக்கக்கூடாது. இப்போது சொன்னதையே பின்னாளில் மாற்றி சொல்லி முகத்தில் கரி பூசுவதில் ஜெயா கெட்டிக்காரர்.
 

====================

கேள்வி கேட்டவர்:சுரேஷ் தனபால்

கூடங்குளம் அனுமின் நிலையம் அமையக்கூடாது என்று என்று போராட்டம் நடத்தும் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அண்ணாச்சி....மக்களுக்கு கருத்து சொல்லுமளவிற்கு நம்ம ஒர்த்தான ஆள் கிடையாது. அதே நேரம், கூடங்குளம் இன்னொரு போபாலாக மாறிவிடக்கூடாது என்பதே என் பிரார்த்தனை. உலக நாடுகள் எல்லாம் கை விட்டு வரும் ஒரு விஷயத்தை இந்தியா செய்ய துணிந்தது நாட்டிற்கும் நல்லதல்ல....நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல...பெருவாரியான மக்களின் விருப்பத்திற்கு எதிராக அங்கே அது தேவையில்லை என்பதே என் கருத்து
 
====================



கேள்வி கேட்டவர்: ஏகலைவன்

கலைஞர் தண்டவாளத்தில் தலைவைத்து போராடியது எதற்காக? அது நாடகமா?

நிச்சயமாக அது நாடகம்ல்ல....சரித்திரம். 1953-ஜூலை மாதம் 13-ஆம் தேதி  தி.மு.க.,வின் செயற்குழு சென்னையில் கூடியது. அதில் மும்முனை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்த மும்முனை போராட்டம் என்னவென்றால்.....
1) முதல்வர் ராஜாஜி கொண்டுவந்துள்ள அரை நேரப்படிப்பு என்பது குலக்கல்வி திட்டமாகும். அதை எதிர்த்து ராஜாஜியின் வீட்டு முன்பு ஈ.வி.கே.சம்பத் தலைமையில் மறியல் செய்யவேண்டும்.

2) திருச்சி அருகேயிருக்கும் கல்லக்குடியில் டால்மியா சிமெண்ட் ஆலை இருப்பதால்..அந்த ஊர் ரயில் நிலையத்திற்கு டால்மியாபுரம் என்று பெயரை சூட்டியுள்ளனர். இதை மாற்றி மீண்டும் கல்லக்குடி என்ற பெயரையே வைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அதற்கான போராட்டத்தை கலைஞர் தலைமையில் நடத்த வேண்டும்.

3) தி.மு.க., வின் போராட்டங்களை பிரதமர் நேரு நான்சென்ஸ் என்று கூறி கொச்சை படுத்தியதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் மறியல் போரட்டங்களை நடத்த்வேண்டும்
என்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதை தொடர்ந்து ஜூலை 15-ஆம் தேதி அங்கு சென்ற கலைஞர் டால்மியாபுரம் என்ற பெயர்பலகையின் மீது கல்லக்குடி என்ற சுவரொட்டியை ஒட்டினார். மறுநொடி கைது செய்யப்படவேண்டும். ஆனால் காவலர்கள் அமைதியாக இருந்தனர். தங்களுடைய போராட்ட முறையை காவலர்கள் அலட்சியப்படுத்துவதாக நினைத்தார் கலைஞர். சட்டென்று போராட்ட வியூகத்தில் மாற்றம் ஒன்றை அமல்படுத்தினார்.
கல்லக்குடி என்ற பெயர் மாற்றத்தை உடனடியாக அங்கீகரிக்கவேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்று சொல்லி ரயில் தண்டவாளத்துக்குக் குறுக்கே படுத்தார் கருணாநிதி. அவரைத் தொடர்ந்து அவருடைய பிரிவில் இருந்த மற்ற தொண்டர்களும் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தனர். எழுந்திருக்கச் சொல்லி மிரட்டினர் காவலர்கள் ஆனால்,கலைஞர் அசைந்துகொடுக்கவில்லை.. ரயில் நிலையத்தின் பெயரை கல்லக்குடி என்று மாற்றும் வரை ரயிலை போக விடமாட்டோம் என்று அவர்கள் கூறினர். கலக்டர், மாவட்ட போலீஸ் அதிகார், மாவட்ட நீதிபதி ஆகியோர் வந்து ரயிலை போக விடுங்கள். உங்கள் கோரிக்கைகளை ரயில்வே மேலிடத்திற்கு அனுப்புங்கள் என்றர்கள். ஆனால், கலைஞர் மறுத்துவிட்டார். இதைத்தொடர்ந்து தண்டவாளத்தில் படுத்திருந்தாலும் பரவாயில்லை. ரயிலை விடுங்கள் என்றனர் அதிகார்கள். ரயில் கிளம்பினால் கலைஞர் குழுவினர் பயந்து போய் எழுந்து விடுவார்கள் என்று அதிகார்கள் நினைத்தனர். ஆனால், நடந்ததோ வேறு, ரயில் நெருங்க நெருங்க கலைஞரும், மற்றவர்களும் அசையவில்லை.

கலைஞர் அருகே வந்ததும், ரயில் நிறுத்தப்பட்டது. ரயிலுக்கும், கலைஞரின் தலைக்கும் சில அடி தூரம்தான் இடைவெளி. கலைஞரும், மற்றவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தை அண்ணா முதல்வராக பதவியேற்றப்பின் இப்படி வர்ணிக்கிறார்
தண்டவாளத்தில் தலைவைத்து படு என்றாலும், அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள் என்றாலும் இரண்டையும் ஒன்றாக பார்ப்பவன் என் தம்பி கருணாநிதி.
நாடகமாக இருந்தால் அண்ணா இப்படி சொல்லியிருப்பாரா?

==============================================
  

இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எங்களுக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறோம். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.  உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com


4 comments:

  1. அருமையான பதில்கள், ஆனால் அறிவுரை கூறும் அளவுக்கு ஒர்த்தான ஆள் இல்லை என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது... நன்றி என் அடுத்த கேள்வி உங்கள் மின் அஞ்சலுக்கு..

    ReplyDelete
  2. அருமையான முயற்சி அரசியல்வாதி.


    பொதுவான கேள்விகளை விட, வராலாற்றில் மக்களுக்கு இருக்கும் குழப்பத்தை விளக்க வகைசெய்ய்ய்ம் கேள்விகளைக் கேட்டால், இது ஒரு அரிய அரசியல் தளமாக அமையும்.

    குறிப்பாக கலைஞர் தண்டவாளத்தில் தலை வைத்துப்படுத்தது நாடகம் என்றே பலரும் நினைத்துவருகின்றனர். அவர்களை உங்கள் பதில் தெளிவுபடுத்தும். அவர் பழைய கலைஞர்..எனவே அது நாடகம் அல்ல தான்.

    ReplyDelete
  3. தண்டவாளத்தில் தலைவைத்து படு என்றாலும், அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள் என்றாலும் இரண்டையும் ஒன்றாக பார்ப்பவன் என் தம்பி கருணாநிதி.
    நாடகமாக இருந்தால் அண்ணா இப்படி சொல்லியிருப்பாரா?//


    அது அப்போ........இப்போ மாறி போச்சேய்யா எல்லாம்...???

    ReplyDelete
  4. சும்மா பிகிள் விடவேண்டாம், கருணாநிதி என்ற நபர் எப்போதும் எதற்காகவும் உண்மையாகப் போராடியது கிடையாது. கண்ணதாசனின் வனவாசம் படித்தால் இந்தத் தண்டவாள மேட்டர் எல்லாம் வண்டவாளம் ஏறும்.

    ஏர் கூலர் வசதியுடன் இரண்டுமணி நேரம் உண்ணாவிரதம் இருந்த கருணாநிதி ஒரு தியாகியா?

    என்ன கொடுமை இது?

    கருணாநிதி ஆட்சியில் இருந்தபோதும் அது டால்மியாபுரமாகவே இருந்தது.அப்போது ஒரு பயலும் தண்டவாளத்தில் இறங்கவில்லை.

    அண்ணா சொன்னார் என்பதால் ஏற்கவேண்டுமா? அண்ணா பொடிவைத்துப் பேசுவதில் கில்லாடி.

    ReplyDelete

இது உங்கள் இடம்.

More than a Blog Aggregator