Friday, 23 September 2011

கண்ணதாசன் வனவாசத்தில் சொன்னதெல்லாம் உண்மையா?
கண்ணதாசன் எழுதிய வனவாசம் புத்தகம் குறித்து உங்கள் கருத்து என்ன? கலைஞர் இது வரை படிக்காத புத்தகம் என்று கூறியதாக ஒரு தகவலும் உலா வருகிறது, அது உண்மையா?
 கலைஞர் படித்திருப்பாரா இல்லையா என்று எனக்கு தெரியாது.

1943லிருந்து 1961 வரை தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை கோர்த்து எழுதப்பட்ட என் சுயசரிதைதான் இந்த வனவாசம் என்று கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.  பெயர்தான் வனவாசமே தவிர...உள்ளிருக்கும் எழுத்தெல்லாம்  யார் மீதாவது சேற்றை வாறி இறைப்பதாகவே இருக்கிறது. 

தனக்கு பிடிக்காத தலைவர்கள் மீது பாலியல் குற்றசாட்டுக்களை அடுக்கும் கண்ணதாசன் அறிஞர் அண்ணாவைக்கூட விட்டுவைக்கவில்லை. கலைஞரையும், அண்ணாவையும் திட்டுவதற்காகவே கண்ணதாசன் வனவாசத்தை எழுதியுள்ளார். அதை விரக்தியின் வெளிப்படு என்றும், வயிற்றெரிச்சலின் எழுத்து வடிவம் என்றும் சொல்கிறார்கள் அதை படித்தவர்கள். 


அப்படி கண்ணதாசன் கலைஞர் மீது சேற்றை வீசுவதற்கு காரணம் இருக்கிறது.
தி.மு.க.,வில் எப்போதும் ஈ.வி.கே.சம்பத்திற்கும், கலைஞருக்கும் ஆகாது. அதே நேரம் கண்ணதாசன் சம்பத்தின் தீவிர ஆதரவாளர். சம்பத் தான் என் தலைவர் என்று பகிரங்கமாக முழங்கியவர். தி.மு.க.,வை விட்டு சம்பத் விலகி தமிழ் தேசிய கட்சியை ஆரம்பிக்க கண்ணதாசனும் ஒரு காரணம். அப்படிப்பட்டவர் எப்படி கலைஞரை பற்றி நல்லவிதமாக எழுதுவார்?. இவ்வளவு ஏன் அதே வனவாசத்தில் அண்ணாவை விட சம்பத்திற்கே செல்வாக்கு அதிகம் இருந்ததாகவும், அதனால், சம்பத்தை பார்த்து அண்ணாத்துரையே நடுங்கிக்கொண்டிருந்தார் எனவும் எழுதியுள்ளார்.

மதியழகனைப் பொதுச்செயலாளராக்குவது என்று சம்பத் எடுத்துக்கொண்ட முடிவிற்கு, அங்கே பெருத்த ஆதரவிருந்தது. கருணாநிதியும் அவரது ஆதரவாளர்களும் கலங்கிப்போய் இருந்தார்கள். எல்லோரும் சம்பத்தையே சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அண்ணாத்துரை சம்பத்தை தனியே அழைத்துக்கொண்டு போனார். உண்மையிலேயே கண்ணீர்விட்டு அழுதார். “இந்தத் தடவை மட்டும் நான் பொதுசெயலாளராக இருந்துவிடுக்கிறேன். நமக்குள்ளே தகராறு இருப்பதாக யாருக்கும் தெரிய வேண்டாம்” என்றார்.

தன்னாலே ஏற்றி வைக்கப்பட்ட ஒரு மனிதர், தன் கையைப் பிடித்துக்கொண்டு அழுகிறார் என்ற உடனேயே சம்பத் செய்த முதற் பெருந்தவறு இதுதான். அவரைச் சுற்றி இருந்த பலபேரும் உறுதியாக நின்றபோது – அவரது இளகிய நெஞ்சம் அண்ணாத்துரையின் கண்ணீருக்குப் பணிந்துவிட்டது. பிறகு சம்பத்தே தன் ஆதரவாளர்களிடம் அண்ணாத்துரைக்கு விட்டுக் கொடுக்குமாறு கூறினார். அண்ணாத்துரை பொதுச்செயலாளராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றெல்லாம் சரடு விட்டிருக்கார் கண்ணதாசன். 

மேலும்,அண்ணா பொதுச்செயலாளரான பிறகும் கட்சியில் சம்பத்தின் கையே ஓங்கி இருந்தது. அதைத் தகர்க்க அண்ணாத்துரை ரகசியமாகத் திட்டமிட்டார் என்றும் வேலூரில் தி.மு.க.,பொதுக்குழுவிற்காக தீர்மானம் தயாரிக்கும் பணியிலிருந்த சம்பத்தை தாக்க அண்ணாவின் ஆசியுடன் கலைஞர் ஆள் ஏற்பாடு செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அப்படி அண்ணாவையும் தாக்கும் காரணம், சம்பத்தை விட கலைஞருக்கு அண்ணா முக்கியத்துவம் கொடுத்ததுதான்.  

கவிஞர்களுக்கு கற்பனையும், பொய்யும் தான் மூலதனம். அதனால்தான் கவிதைக்கு பொய்யழகு என்கிறார்கள். ஆனால், கண்ணதாசனின் கற்பனை வரியும் , பொய்யும் கவிதையில் மட்டுமல்லாது வனவாசம் என்ற அவரது சுயசரிதையிலும் இடம் பிடித்திருக்கிறது.

 ================

இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எனக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறேன். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள். 
உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com


8 comments:

 1. சென்ற பதிவில் இது குறித்து பதில் அளித்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்..

  ReplyDelete
 2. இந்த கேள்வியை உங்கள் மினஞ்சளுக்கு ஏற்கனவே அனுப்பி விட்டேன்

  எம்.ஜி.ஆர் ஆண்ட அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தமிழக மக்களுக்கு செய்தவை என்று என்னென்ன சாதனைகள் உண்டு?
  காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தியத்தை தவிர, எம்.ஜி.ஆர் வேறு என்ன செய்திருக்கிறார் தமிழக மக்களுக்கு?

  ReplyDelete
 3. அண்ணாவை ஓரம் கட்டி கலைஞரை பொதுசெயலாளராக ஆக்கவும் சம்பத் முயற்சி செய்தார் என்றும், அண்ணா கலைஞரை அழைத்து போய் அதை தடுத்து விட்டார் என்றும் ஒரு இடத்தில வரும். மொத்தத்தில் வனவாசம் ஒரு ஆற்றாமையின் வெளிப்பாடு

  அதில் நடிகரை பற்றியும் தாக்கி உண்டு. நடிகர் என்பது எம்ஜியாரை குறிக்குமா ?

  ReplyDelete
 4. அண்ணாவை ஓரம் கட்டி கலைஞரை பொதுசெயலாளராக ஆக்கவும் சம்பத் முயற்சி செய்தார் என்றும், அண்ணா கலைஞரை அழைத்து போய் அதை தடுத்து விட்டார் என்றும் ஒரு இடத்தில வரும். மொத்தத்தில் வனவாசம் ஒரு ஆற்றாமையின் வெளிப்பாடு

  அதில் நடிகரை பற்றியும் தாக்கி உண்டு. நடிகர் என்பது எம்ஜியாரை குறிக்குமா ?

  ReplyDelete
 5. ??????? ???????? ?????? ??????????????? ???? dmk ???????? ?????????? ??? ????????? ??????? ????? ??? ????????? ????????????? ????? ???????????? ??????.????????? ??????????? ????? ???????????? ??????? ?????? ??????? ?????? ??????????,??? ????? ?????????? ?????? ???? ????????? ????? ????? ?????????? ??????????????? ???????? ??????????? ???????? ?????????.???????? ???? ???????????.

  ReplyDelete
 6. வனவாசம் வெளியாகி இத்தனை வருடங்களாகியும் எந்த dmk தலைவரும் அதைப்பற்றி பேச தயங்கினர் என்றால் அதில் ஏதோ அவர்களால் மறுக்கமுடியாத உண்மை இருந்ததுதான் காரணம்.அண்ணாதுரை முதல்கொண்டு திமுக கூட்டங்களில் பாலியல் கதைகளை சொல்லாத தலைவன் யாருமில்லை,ஒரு பிரபல நடிகையுடன் தனக்கு சரீர சம்பந்தம் உண்டு என்று மேடைதோறும் பெருமையாகசொல்லி தம்பிகளை கிளுகிளுக்க செய்தவர் அண்ணாதுரை.கவியரசர் பொய் சொல்லவில்லை.

  ReplyDelete
 7. கண்ணதாசன் பொய் சொல்ல தேவை இல்லை . காரணம் தன்னை பற்றி
  வெளிபடையாக பேசும் மனிதர் கவியரசு.பிறரை பற்றி பொய் சொல்ல மாட்டார் . கவியரசு சொன்னதை அந்த அரசியல் தலைவர் மறுப்பு சொல்லவில்லை இன்னும் ஏன்?

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete

இது உங்கள் இடம்.