Sunday, 11 September 2011

இந்திராகாந்தி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், வைகோ, காந்தி, ராஜாஜி(அதிரடி அரசியல் கேள்வி பதில்கள் ஆரம்பம்)


இந்திராகாந்தி- ஜெயலலிதா ஒப்பிடுங்கள்?
இந்திராகாந்தியை பிரதமராக்கியவர் காமராஜர். பின்னர் ஒருகட்டத்தில் காமராஜரையே ஹூ ஈஸ் காமராஜர் என்று  நன்றி இல்லாமல் கேட்டவர் இந்திராகாந்தி. எமெர்ஜென்சி காலத்தில் காமராஜருக்கு நெருக்கமான ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்களையெல்லாம் சிறையில் அடைத்தவர் இந்திரா....எமெர்ஜென்ஸியை பற்றி தன்னை சந்திக்க வந்தவர்களிடமெல்லாம் நாடு போச்சு.. நாடு போச்சு என்று புலம்பியபடியே இருந்தார் பெருந்தலைவர். அந்தக்கவலையிலேயே உயிரிழந்தார்.

அதேபோல்தான் ஜெயலலிதாவும். எம்.ஜி.ஆரின் கட்டளையை மீறி ஜெயலலிதாவிற்க்கு ஆதரவு கொடுத்தவர்கள் சாத்தூரார், பண்ரூட்டியார், திருநாவுக்கரசர், கருப்புசாமி பாண்டியன் போன்றவர்கள். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பின் ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏ.,-க்களை அணிமாறாமல் இருக்கவைப்பதில் பெரும்பங்கு இவர்களுக்கு உரியது. ஜெயலலிதாவை ஊர் ஊராக அழைத்துப்போய் கூட்டம் நடத்தியவர்கள் இவர்கள். அப்படிப்பட்டவர்களை அ.தி.மு.க., பொதுச்செயலாளரானபின் துரோகியென முத்திரை குத்தி கட்சியை விட்டு நீக்கியவர் ஜெ....ஜெயின் மந்திரிசபையில் இவர்கள் இடம்பெறவே இல்லை.
ஆனால்,எம்.ஜி.ஆர் காலத்தில் ஜெயலலிதாவை தீவிரமாக எதிர்த்த ஆர்.எம்.வீரப்பன், எஸ்.டி.சோமசுந்தரம், முத்துசாமி, பொன்னையன் போன்றவர்களை அமைச்சராக்கியும், பால்கனிப்பாவை என்று விமர்சித்த காளிமுத்துவை சபாநாயகராக்கியும், பி.ஹெச்.பாண்டியனை எம்.எல்.ஏ. வாக்கிய  வேடிக்கையும் நடந்தது. இப்போது சொல்லுங்கள் இந்திராகாந்தியும், ஜெயலலிதாவும் ஒன்றுதானே....

*****************



அ.தி.மு.க சந்தித்த முதல் தேர்தல் எது?

அது ஒரு இடைத்தேர்தல்....தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர்,  அ.தி.மு.க.,வை ஆரம்பித்தார். அப்போது(1973) திண்டுக்கல் தொகுதி தி.மு.க., எம்.பி- ராஜங்கம் மரணமடைந்ததால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் தி.மு.க-சார்பில் பொன்.முத்துராமலிங்கமும், அ.தி.மு.க. சார்பில் மாயத்தேவரும், காமராஜரின் பழைய காங்கிரஸ்(ஸ்தாபன காங்கிரஸ்) சார்பில் என்.எஸ்.வி.சித்தனும், இந்திரா காங்கிரஸ் சார்பில் சீமைச்சாமி என்பவரும் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க., வேட்பாளர் மாயத்தேவர் 2,60,000 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றிபெற்றார். 1,19,000 வாக்குகள் பெற்று அடுத்த இடத்தை காமராஜரின் பழைய காங்கிரஸ் வேட்பாளர் சித்தன் பிடித்தார். தி.மு.க.,வின் பொன்.முத்துராமலிங்கம் 93,000 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். ஆனால், இந்திரா காங்கிரசை சேர்ந்த வேட்பாளர் சீமைச்சாமி 11,000 வாக்குகலை பெற்று டெபாசிட் இழந்தார். அந்த வகையில் அ.தி.மு.க., சந்தித்த முதல் தேர்தல் திண்டுக்கல் இடைத்தேர்தல், முதல் அதிமுக., எம்.பி., மாயத்தேவர். 

*****************



மூதறிஞர் ராஜாஜி, காந்திக்கு சம்பந்தியாமே உண்மையா?

ஆமாம். மகாத்மா காந்தியின் மகன் தேவதாஸ் காந்தி ராஜாஜியின் மகளான லட்சுமியை காதலித்தார். இதையறிந்த காந்தி இந்தக்காதலை ஆதரிக்கவுமில்லை. எதிர்க்கவுமில்லை. மாறாக, ஐந்து வருடங்கள் நீங்கள் சந்திக்கவே கூடாது, கடிதமும் எழுதிக்கொள்ளக்கூடாது, ஐந்து வருடங்களுக்கு பிறகும் நீங்கள் இதே உறுதியுடன் காதலித்தால் உங்கள் திருமணத்தை நடத்திவைக்கிறேன் என்று நிபந்தனை விதித்தார்.  காந்தியின் நிபந்தனையை ஏற்றுக்கொண்ட இருவரும் அதன்படியே இருந்தனர். ஐந்து வருடங்களுக்கு பிறகு 1933-ஆம் ஆண்டு அவர்கள் திருமணம் புனேயில் நடந்தது. 

******************






எம்.ஜி.ஆர்., தி.மு.க-விலிருந்து பிரிந்துசென்று ஆட்சியை பிடித்ததுபோல், வைகோ-வால் முடியவில்லையே?

எம்.ஜி.ஆர்-பிரிந்தபோது இரண்டாம் கட்ட தலைவர்களை தி.மு.க-விலேயே விட்டுவிட்டு  வாக்களிக்கும் தொண்டர்களை அவர் பின்னால் அழைத்துசென்றார். வென்றார். வைகோ- பிரிந்தபோது வாக்களிக்கும் தொண்டர்களை தி.மு.க-விலேயே விட்டுவிட்டு  இரண்டாம் கட்ட தலைவர்களை அவர் பின்னால் அழைத்து சென்றார்.  தோற்றார். 

*************************

இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எனக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறேன். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள். 

உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள்.

உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com




9 comments:

  1. தெரியாத செய்தி..அருமை ...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. எமர்ஜன்சி நீடித்திருந்தால் நாடு உருப்பட்டு இருக்கும் என்று ஒரு கூற்று உண்டு....அது உண்மையா!

    எம்ஜிஆரின் மறைவு இயற்கையானதா?...உண்மையில் நடந்தது என்ன?...விளக்க முடியுமா நண்பா!

    ReplyDelete
  3. ராஜீவ்காந்தியை உண்மையிலேயே கொன்றது யார்...???
    எம்ஜியாரின் மரணம் எப்படிப்பட்டது...???

    ReplyDelete
  4. //என்னைப்பற்றி சொல்வதென்றால் நானும் கொஞ்சம் பிரபலமானவன்தான். விரைவில் முகம் காட்டுகிறேன்.//

    அடடா..பெயர்க்குழப்பம் இவரை எங்கே போனாலும் விடாது போலிருக்கே..பேரைச் சொல்லுங்க பாஸ்..

    உன்னை நான் அறிவேன்
    என்னை யன்றி - யார் அறிவார்!

    ReplyDelete
  5. நல்ல பல பரவலாக தெரியாத தகவல்கள்..

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete

இது உங்கள் இடம்.

More than a Blog Aggregator